கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் இணை மேலாண் இயக்குனராக பணி மாறுதல் பெற்றார். இதையடுத்து, கோவை மாநகராட்சியின் புதிய கமிஷனராக சிவகுரு பிரபாகரன் இன்று பதவியேற்றார்.
இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா, மேல ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர். தனது கிராமத்திற்கு பல்வேறு வசதிகளை உருவாக்கி தந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் மூன்றாம் இடம் பிடித்தவர்.
கோவை மாநகராட்சியின் 29வது கமிஷனராக பதவியேற்ற அவருக்கு ஊழியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ’நான் 2018 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ஜ். சென்னை மாநகராட்சியில் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளேன். அங்கு பாதாளச் சாக்கடை, சாலைகள், மருத்துவம், பள்ளி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு உள்ளேன்.
/indian-express-tamil/media/media_files/OUlTU6EvfRLX7ykPpkXE.jpeg)
மூன்று வருடங்களாக சிவில் இன்ஜினியராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. மேலும் வட சென்னையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளேன். முதல்வர், அமைச்சர்கள், செயலாளர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து எப்படி பணிகளை திறம்பட செய்வது என கற்றுக்கொண்டேன்.
கோவை மாநகராட்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரைவாக புரிந்து கொண்டு திட்டங்கள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள தன்னார்வலர்கள் நல்ல பணிக்கு பயன்படுத்தப்படுவர்.
சென்னையில் இருந்ததால் பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளில் எனக்கு நிறைய அனுபவம் உள்ளது. சரியாக கையாளுவேன், என்று கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“