/tamil-ie/media/media_files/uploads/2023/03/death.jpg)
Sivakasi
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நிகழ்ந்த ஒரு சோகமான விபத்தில், லிஃப்ட்டிலிருந்து தவறி விழுந்து பள்ளிச் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி, முஸ்லிம் ஓடைத் தெருவில் வசித்து வரும் பாதுஷா - சம்ஜான் பீவி தம்பதியரின் ஒரே மகன், 12 வயதான முகமது, ஆறாம் வகுப்பு முடித்துவிட்டு, ஏழாம் வகுப்பு செல்ல தயாராக இருந்தான். பள்ளி விடுமுறை என்பதால், அவன் தனது தந்தையின் அச்சக வேலைக்கு துணையாகச் சென்றுள்ளான்.
அச்சகத்தில் காகிதங்களை மேலும் கீழும் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் லிஃப்டில் முகமது விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லிஃப்டில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முகமது பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.