ரூ.2 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் எச்சத்தைக் கடத்திய இருவர் கைது

திருச்செந்தூர் அருகே அம்பர்கிரிஸ் கடத்தியதாக 6 பேரை காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

whale vomit

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அம்பர்கிரிஸ் கடத்தியதாக 6 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அம்பர்கிரிஸ் சர்வதேச அளவிலான உயர்ரக வாசனைத் திரவியம் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் திமிங்கலம் உமிழக்கூடிய 2 கிலோ எடையுள்ள அமர்கிரீஸ் என்ற பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது திமிங்கலங்களின் வயிற்றுக்குள் உருவாகும் ஒரு மெழுகு பொருள். இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி.

இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார், அம்பர்கிரிஸ் கடத்தி வந்த இளங்கோவன், வெங்கடேஷ், ஜான் பிரிட்டோ, ராஜா முகமது, முகமது அஸ்லாம் மற்றும் ராம்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Six arrested for smuggling whale vomit worth 2 crore

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com