இ.பி.எஸ் வீட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தை: 6 முன்னாள் அமைச்சர்கள் பேசியது என்ன?

சேலத்தில் உள்ள இ.பி.எஸ் வீட்டில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் நேற்று சென்று பேசியதாக கூறப்படுகிறது. இதில் அ.தி.மு.க பழைய மாதிரி ஒன்றாக சேர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். ஆனால் இது இ.பி.எஸ்-க்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சேலத்தில் உள்ள இ.பி.எஸ் வீட்டில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் நேற்று சென்று பேசியதாக கூறப்படுகிறது. இதில் அ.தி.மு.க பழைய மாதிரி ஒன்றாக சேர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். ஆனால் இது இ.பி.எஸ்-க்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இ.பி.எஸ்

சேலத்தில் உள்ள இ.பி.எஸ் வீட்டில் அ.தி.மு.கவைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் நேற்று சென்று பேசியதாக கூறப்படுகிறது. இதில் அ.தி.மு.க பழைய மாதிரி ஒன்றாக சேர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். ஆனால் இது இ.பி.எஸ்-க்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

Advertisment

ஓவ்வொரு முறை தேர்தலை அறிவித்த பிறகு அ.தி.மு.கவில் சலசலப்பு ஏற்படும் என்றும் இந்த முறை வழக்கத்தைவிட  வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். 
முன்னாள் முதல்வர் ஜெயயலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவின் ஆதரவில் இ.பி.எஸ் முதல்வரானார். தொடர்ந்து சசிகலா சிறைக்கு சென்றதும். சசிகலா கட்சியிலிருந்து மெதுவாக ஓரம்கட்டப்பட்டார். டி.டி.வி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார். அதில் 6 % வாக்குகள் பெற்றார். அதே தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் தினகரன் பிரித்த வாக்குகளால், 2 நாடாளுமன்ற தொகுதிகளில், 4 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. அப்போதே அ.தி.மு.க முழுவதும் சேர்த்து செயல்பட வேண்டும் என்றும், இந்த பிரிவால் தி.மு.கவிற்கு சாதகம் என்றும் கூறப்பட்டது.
 2021 தேர்தலில் அ.ம.மு.க-வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க தலைமை கூறியது. ஆனால் இதற்கு அவர் சமதிக்கவில்லை. இந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மொத்தமாக 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கிட்டதட்ட 20 தொகுதிகளில் அ.ம.மு.கவின் வாக்கு பிரிப்பால் அ.தி.மு.க வால் வெற்றி பெற முடியவில்லை. 
தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற இதில் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்தது. கட்சிக்கு உண்மையாக உழைக்கும் அ.தி.மு.க தொண்டர்களை, இ.பி.எஸ் கண்டு கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு நடுவில், இ.பி.எஸ் மற்றும் ஒ.;பி.எஸ் இருவருக்கும் மோதல் வெடித்தது. இ.பி.எஸ் ஓ.பி.எஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கினார். பதிலுக்கு , ஓ.பி.எஸ் இ.பி.எஸ் மற்றும் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக கூறினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளிவந்த அ.தி.மு.க ,தே.மு.தி.கவுடன் மற்றும் இதர கட்சிகளுடன் போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெறமுடியவில்லை. இது பெரும் அதிர்ச்சியை அ.தி.மு.கவிற்கு ஏற்படுத்தியது. 
இந்நிலையில் நேற்று சேலத்தில் உள்ள இ.பி.எஸ் வீட்டில்  செங்கோட்டையன், நத்தம் விஷவநாதன், சி.வி ஷண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி அன்பழகன், ஆகிய ஆறு பேரும் இ.பி.எஸ்-ஐ சந்தித்து பேசினர். சுமார் 2 ½ மணி நேரம் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. கட்சி  மீண்டும் ஒன்றாக இணைந்தால், இதுபோன்ற தோல்விகளை தடுக்கலாம் என்று 6 பேரும் தெரிவித்துள்ளனர். பிரிந்து செயல்படுவதே தொடர் தோல்விக்கு காரணம் என்று அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. 
ஆனால் இறுதி வரை இ.பி.எஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் மீண்டும் அவருடன் இந்த 6 பேரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: