கோவையில் 6 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவல்: தமிழ்நாட்டில் உச்ச கட்ட பாதுகாப்பு

six Lashkar-e-taiba terrorists had intruded: கோவையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து, உச்ச கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By: Updated: August 23, 2019, 12:15:29 PM

six Lashkar-e-taiba terrorists had intruded in Kovai: கோவையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து, கோவை மாநகரம் முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய உளவுத்துறை இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள் லஷ்கர் இ தொய்பா இயக்கத் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் கோவையில் இருப்பதாகவும் எச்சரிக்கை செய்துள்ளது.

அந்த தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்று மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இலியாஸ் அன்வர் என்ற தீவிரவாதியை மட்டும் அடையாளம் கண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தீவிரவாதிகள் இந்துக்களைப் போல அவர்கள் நெற்றியில் விபுதி, திலகமிட்டு மாறுவேடத்திலும் இருப்பார்கள் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.

உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் உச்ச பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரச்னைக்குரிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் ஊடுருவியதாக கூறப்படும் தீவிரவாதியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

உளவுத்துறை எச்சரித்த நிலையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள நபர் குறித்த தகவல் தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Six lashkar e taiba terrorists had intruded high alert was issued in coimbatore

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X