உணவுப் பாதுகாப்புத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB)இணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) நகரில் உள்ள 19 பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் கூட்டாக ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு நிறுவனத்தில் லாரி மூலம் விநியோகிக்கப்பட்ட தண்ணீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்வது தெரியவந்தது என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் கூறினார்.
மேலும், உரிமம் பெறாமல், சுகாதாரமற்ற முறையில் குடிநீர் உற்பத்தி செய்த 6 பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து கூறுகையில், பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை வாங்கும் போது, அதில் உற்பத்தியாளரின் பெயர் (நிறுவனத்தின் பெயர்), முகவரி மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக என்பதை பார்க்க வேண்டும். லேபிளில் ISI மற்றும் BIS குறியீடு மற்றும் FSSAI உரிமம் பெற்றதற்கான விவரங்கள் இருக்க வேண்டும். தண்ணீர் கேன்களில் எக்ஸ்பைரி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் கேன்களில் அழுக்கு அல்லது கீறல்கள் இருந்தால் அதை வாங்க கூடாது என்று கூறினார்.
குடிநீர் விநியோகத்திற்கு FSSAI உரிமம் கட்டாயம் தேவை. மேலும், ஒவ்வொரு குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிலும் நீரின் தரத்தை சோதிக்க நுண்ணுயிரியல் ஆய்வகம் இருக்க வேண்டும். இந்த ஆய்வகங்களில் உள்ள ரசாயனங்களை சோதனை செய்ததில், பாட்டில்களுக்கு காலாவதி தேதி எதுவும் இல்லை எனத் தெரியவந்தது என்றார்.
மேலும் இதுபோன்ற புகார்களுக்கு பொதுமக்கள், உணவுப் பாதுகாப்புத் துறையின் 9444042322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“