கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா அறக்கட்டளையில் 2016ஆம் ஆண்டு முதல் அங்கு வசித்து வந்த 6 பேர் காணாமல் போனதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
அறக்கட்டளையின் தன்னார்வலரான தனது சகோதரர் காணாமல் போனது தொடர்பாக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த திருமலை என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு கூடுதல் அரசு வழக்கறிஞர் இ.ராஜ் திலக் இதனை சமர்ப்பித்தார்.
இது தொடர்பாக போலீசார், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களில் ஒரு சிலர் வீடு திரும்பியிருக்கலாம் எனவும் ஆனால் அது தொடர்பான விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிலை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி வரை பெஞ்ச் அவகாசம் அளித்துள்ளது.
திருமலை தனது மனுவில், தனது சகோதரர் கணேசனை காணவில்லை என்று தமக்கு 2023 மார்ச் 2ஆம் தேதி தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“