திருநெல்வேலி – சென்னை எழும்பூருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 22ம் தேதி முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. மொத்தம் 6 ரயில்கள் நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் , மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலி செல்லும், மறு மார்க்கத்தில் வியாழக்கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் செல்லும் .
சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு ஏசி ஒரு பெட்டியும், மூன்றடுக்கு ஏசி 6 பெட்டியும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி 7, முன்பதிவு செய்யப்பட்டாத பெட்டி 4 இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்- வேளாகண்ணிக்கு வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 23 ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். வேளாங்கண்ணி- எழும்பூருக்கு வாரந்தொறும் சனி , திங்கள், கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.
தாம்பரம் – ராமநாதபுரத்துக்கு வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 29ம் தேதி முதல் அடுத்த மாதம் 14ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ராமநாதபுரம் – தாம்பரத்துக்கு வாராந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 30ம் தேதி முதல் அடுத்த 15ம் தேதி வரை நிட்த்து இயக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“