Advertisment

நிரம்பியது மேட்டூர் அணை; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செக்கானுர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கால் மேடு உள்ளிட்ட கதவணைகளில் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Sluice gates of Mettur dam opened in Salem

Sluice gates of Mettur dam opened in Salem : காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்தது. 119 அடி கொள்ளளவு கொண்டுள்ள அணை 10 நாட்களில் 10 அடி உயர்ந்து முழுக் கொள்ளளவை எட்டியது. 08.11.2021 இரவு 08.00 மணிக்கு அணையின் நீர்மட்டம் 118.32 அடியாக இருந்தது.

Advertisment

இன்று காலை 119 அடியை எட்டிய நிலையில் அணையில் இருந்து முதல் கட்டமாக இன்று காலை 5 மணிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டது. 7 மணி அளவில் நீர் வெளியேற்றம் 15 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர் வரும் நீரின் அளவு அதிகரித்த நிலையில் 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Chennai Rains Live Updates: தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு நகல்

publive-image

அணையின் நீர்வரத்து தற்போது 26,440 அடியாக உள்ளது. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் அளவு 20 ஆயிரம் கனஅடியாக உள்ளது. செக்கானுர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கால் மேடு உள்ளிட்ட கதவணைகளில் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் உபர் நீர் போக்கி 16 கண் பலம் அருகே வசிக்கும் நபர்களுக்கு தண்டோரா மூலம் வருவாய்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் காட்சிகள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் கால்நடை மேய்ச்சலுக்காக வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mettur Dam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment