Tnpsc Group4 | தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வுகளை நடத்தியது. இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. அந்தக் கேள்வி, “ஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும். 30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது 'அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்? என்பதே ஆகும்.
கேள்விக்கு விடையாக,
A) 0
B) 10
C) 20
D) 25
E) விடை தெரியவில்லை எனக் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கேள்விக்கு பலரும் விடை 0 என நினைத்திருந்தனர். ஆனால் டிரைவர் புத்திசாலி அல்லவா? முதல் 10 சுங்கச் சாவடியை கடக்கும்போது அவரிடம் 30 பழங்கள் குறைந்து இருக்கும். அதேநேரம் அவரிடம் இரண்டு மூட்டைகள்தான் இருக்கும். அடுத்து 15 சுங்க சாவடிகளை கடக்கும்போது அவரிடம் ஒரு மூட்டை காலியாகி 30 பழங்கள் இருக்கும். மீதமுள்ள சுங்க சாவடியை அவர் 5 பழங்கள் கொடுத்து கடந்துவிடுவார். ஆக அவரிடம் 25 மாம்பழங்கள் மீதம் இருக்கும். இந்தக் கேள்விக்கு சரியான விடை 25 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“