கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் எழுதிய 'தடையொன்றுமில்லை' புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-16-at-16.39.10.jpeg)
இந்நிகழ்ச்சிக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட்டார்.
இதையும் படியுங்கள்: சட்டமன்ற பதவி; சபாநாயகர் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்: மதுரையில் ஓ.பி.எஸ் பேட்டி
பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், முக்கிய நிர்வாகிகள் மற்றும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-16-at-16.39.09.jpeg)
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசியதாவது, ”வானதி சீனிவாசன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள ’தடையொன்றுமில்லை’ புத்தகத்தின் பக்கங்களில், இளம் வானதி எவ்வாறு தனக்காக எழுந்து நின்றார் என தெரியவரும். வானதி ஒரு கிராமத்தில் குழந்தையாக வளர்ந்தபோது எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தியதைப் பற்றி இந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.
பெண்கள் தாங்கள் கல்வி கற்கும் போது எந்த தொழிலை மேற்கொள்ள வேண்டும் அல்லது இல்லத்தரசிகளாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மகளாக, மனைவியாக, தாயாக மதிக்கப்பட வேண்டும். இந்த ஆசீர்வாதங்களுடன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அதிகாரத்துடன் வாழ்வார்கள். மேலும் வானதி சீனிவாசன் எழுதியுள்ள இப்புத்தகத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கான முன்னேற்றத்தை கண்டடைய முடியும்” என தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-16-at-16.39.07-1.jpeg)
பின்னர், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பேசியதாவது, “அரசியலில் சாதிக்க என் பெற்றோரும், கணவரும், மகன்களும் முக்கிய காரணம் எனவும், என்னை நல்வழி படுத்திய முக்கிய தலைவர்கள் மேடையில் அமர்ந்துள்ளார்கள். இது சுயசரிதை கிடையாது. என்னுடைய அனுபவங்களை புத்தகங்களில் வெளியிட்டுள்ளோம். வீட்டில் உள்ள பெண்களும் அரசியலில் சாதிக்க முடியும் என்றால் நாம் அதற்கான நேரத்தை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும். பா.ஜ.க பல்வேறு வாய்ப்புகளும், பொறுப்புகளும் எனக்கு கொடுத்துள்ளது. கொடுத்தும் வருகிறது.
பதவி, பொறுப்பு என்பதை தலைக்கு ஏற்றாமல் மக்களுக்கு பணி செய்ய வேண்டும். பிரதமர் மோடிதான் இதற்கு உதாரணம். பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைய ஊக்குவிப்பதற்காக இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்” என கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil