Tiruchirappalli திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி தனது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த பேஸ்ட் வடிவிலான 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 920 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 920 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சுங்கத்துறை ஓட்டுநர் மூலம் கடத்தப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் ஒரு கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“