திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது. அதில் சந்தேகத்திற்கு இடமாக வந்த விமான பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்ததில், இன்டர்நெட் மோடம் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களில் மறைத்து எடுத்து வந்த ரூ.46 லட்சத்து 35 ஆயிரத்து 512 மதிப்புள்ள தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அந்தப் பயணியிடம் திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்