கோவை பேரூர் அருகே போத்தனூர் பகுதியில் வெள்ளிக்கோல் வரையான் பாம்பை விழுங்கிய நாகப் பாம்பை பாம்புபிடி வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கோவை போத்தனூர் பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு பதுங்கி இருப்பதாக, பாம்பு பிடி வீரர்களான மோகன் மற்றும் ராம் இருவருக்கு தகவல் தரப்பட்டது.
தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற இருவரும் சமையல் அறைக்குள் இருந்த பாம்பை பார்த்தனர். பாத்திரங்கள் அடுக்கி வைத்து இருந்த பகுதியில், ட்ரம்முக்கு பின்னால் அந்த பாம்பின் வால் மட்டுமே தெரிந்து இருக்கிறது.
உடனே வாலை பிடித்து பத்திரமாக பாம்பை வெளியே எடுத்த பொழுது, எதிர் முனையிலும் ஒரு வால் தெரிந்து இருக்கிறது. பின்பு உற்று நோக்கிய பொழுது, அந்த பாம்பு வேறு ஒரு பாம்பை விழுங்கி இருப்பதை பார்த்தனர்.
https://www.facebook.com/watch?v=1329453581092599
வழக்கமாக பாம்புகளை பிடித்தவுடன் அது வேகமாக ஓட முயற்சிக்கும். இந்த நிலையிலெ பாம்பை கக்க ஆரம்பித்தது. பாம்பை முழுமையாக கக்கியது.
வெள்ளி கோல் வரியான் எனும் விசமற்ற பாம்பை, நாகப்பாம்பு விழுங்கியது தெரியவந்தன. இதில் வெள்ளிக்கோல் வரையான் பாம்பு இறந்திருந்தது.
பெரிய பாம்பை விழுங்கி நல்ல பாம்பு அசைய முடியாமல் படுத்து இருந்ததனால், அது வீட்டிற்குள் மற்ற பகுதிகளுக்குள் செல்லவில்லை.
இந்த நிலையிலே நாகப்பாம்பை மீட்ட பாம்பு பிடி வீரர்கள் மோகன் மற்றும் ராம் பாட்டிலில் பாதுகாப்பாக அடைத்து அதனை பத்திரமாக வனத்துறை ஊழியர்களிடத்தில் ஒப்படைத்தனர்.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“