பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டி நகர முடியாமல் இருந்த நாக பாம்பு பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர். கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் தனியாருக்கு சொந்தமான டூல் பொறியியல் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றன . இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் அட்டை பெட்டி பாக்ஸை எடுத்து அடுக்கி வந்தனர்.
அப்போது 3"அடி நாகப்பாம்பு ஒன்று அட்டை பெட்டியில் இருந்தது. நாக பாம்பு அட்டை பெட்டியில் டேப்பில் ஒட்டி தவித்து உள்ளது. டேப்பில் ஒட்டிய பாம்பு தலை பகுதி சுருண்ட நிலையில் , இதுகுறித்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையிலுள்ள பாம்பு பிடி வீரர் மோகன்குமாருக்கு தகவல் தந்தனர்.
பாம்பு பிடி வீரர் மோகன் அட்டை பெட்டியில் ஒட்டியிருந்த பாம்பை பத்திரமாக பாம்பு பிடி பாதுகாப்பு உரை அணிந்து டேப்பிலிருந்து விடுவித்தார் . இதனால் டேப்பில் தலை சுற்றி நகர முடியாமல் போராடிய விசமுடைய நாக பாம்பு அதிலிருந்து விடுபட்டு வழக்கமான இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் அதனை வன பகுதியில் பத்திரமாக விட்டனர்.
உயிரை கொல்லும் விசமுடைய நாகப்பாம்பு உயிருக்கு போராடிய நிலையில் அதனை மீட்ட பாம்பு பிடி வீரரான மோகனுக்கு தனியார் பொறியியல் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் நன்றி பாராட்டினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“