பாரதிய ஜனதா கட்சியினர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் இந்தியா இந்நேரம் முன்னேறி இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் பொதுக் கூட்டத்தில் சினேகன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதிமய்யம் கட்சியினரின் முதல் பொதுக்கூட்டம் கோவையில் துவங்கியுள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யத்தினர் பொதுக்கூட்டங்களை நடத்த உள்ளனர்.
அதன் துவக்கமாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி காமராஜபுரம் பகுதியில் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தினர், இதில் மாற்று கட்சியை சேர்ந்த 110 பேர் மநீம வில் இணைந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் தங்கவேலு, தலைமையில் மண்டல செயலாளர், ரங்கநாதன் முன்னிலையில் மத்திய மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்புரையாற்றுகிறார்.
மாநிலத் துணைத் தலைவர் மௌவுரியா மற்றும் இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் பேசிய சினேகன், அரசியலில் வெற்றி பெற்று மக்களின் பரத்தை சுருட்டிக்கொண்டு மாடமாளிகைகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக வரவில்லை என்றார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் அவர்கள் தவாக்குறுதிகளில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றியுள்ளார் என கேள்வி எழுப்பினார். மேலும் இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி சொன்னதை நிறைவேற்றினார் எனவும் கேள்வி எழுப்பிய அவர் பாஜக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் இந்தியா இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கும் என ஆவேசம் கொண்டார்.
மேலும் பாஜகவினர் தூய்மை பணியாளர்கள் குறித்து பலமுறை பேசியதாகவும் ஆனால் தூய்மை பணியாளர்கள் வசிக்கின்ற இடமே தூய்மையாக இல்லை எனவும் தெரிவித்த அவர் மலம் அள்ளுபவர்கள் ஆலயத்தில் மணி அடிக்கலாம் என கூறினீர்களே அப்பொழுது அதற்கு பதிலாக மணி அடிப்பவர்கள் மலம் அள்ளலாமா என பதிலடி கேட்கிறோம் எனவும் அதுதான் ஜனநாயகம் என்று ஆவேசமாக பேசினார்.
செய்தி: பி. ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"