சென்னை விமான நிலையத்தில் ரூ.5.35 கோடி மதிப்புள்ள 542 கிராம் மெத்தகுலோன் மற்றும் 644 கிராம் ஹெராயின் ஆகியவற்றை கண்டுபிடிக்க ஓரியோ என்ற மோப்ப நாய் சுங்க அதிகாரிகளுக்கு உதவியுள்ளது.
டிசம்பர் 18 அன்று உகாண்டாவில் இருந்து வந்த ஒரு பெண் பயணியின் பொருட்களில் இருந்து சுங்க அதிகாரிகள் போதைப்பொருட்களை மீட்டனர். இந்த போதைப் பொருளைக் கண்டுபிடிக்க ஓரியோ என்ற மோப்ப நாய் உதவியுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட வீடியோ, விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு மோப்ப நாய் உதவுவதைக் காட்டியது.
இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ் மீது பா.ஜ.க-வுக்கு அன்பு- மரியாதை; அண்ணாமலை இதை உணர வேண்டும்: புகழேந்தி
இது தொடர்பாக அந்த உகாண்டா பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. முதற்கட்ட பரிசோதனையில் 1,542 கிராம் மெத்தகுலோன் மற்றும் ரூ.5.35 கோடி மதிப்புள்ள ஹெராயின் மீட்கபட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
மெத்தகுலோன் என்பது போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஒரு மயக்க-ஹிப்னாடிக் மருந்து.
முன்னதாக வெள்ளிக்கிழமை, கென்யாவைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து ரூ.6.31 கோடி மதிப்புள்ள 900 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. டிசம்பர் 13 அன்று ஷார்ஜாவிலிருந்து (யு.ஏ.இ) வந்த கென்ய பயணி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். முதற்கட்ட பரிசோதனையில் அவரது மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட போதை மருந்து மீட்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil