Advertisment

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம்: சமூக ஆர்வலர் மேதா பட்கர் பங்கேற்பு

நாட்டில் வளர்ச்சித் திட்டம் வேண்டுமா என்பதை மக்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும், கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புறக்கணிக்க முடியாது என்றும் பட்கர் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம்: சமூக ஆர்வலர் மேதா பட்கர் பங்கேற்பு

சமூக ஆர்வலர் மேதா பட்கர் (Express Photo)

சென்னை புறநகரான பரந்தூரில், இரண்டாவது விமான நிலையத்தை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பரிந்துரை சேர்ந்த மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

publive-image

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏக்னாபுரத்தில் வசிக்கும் மக்கள் இதற்கு போராட்டம் நடத்தி வரும் நிலையில், சமூக ஆர்வலர் மேதா பட்கர் அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்.

ஏக்னாபுரம் குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நலக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டம் வெள்ளிக்கிழமை 220வது நாளை எட்டியது.

"வளர்ச்சித் திட்டம் வேண்டுமா என்பதை மக்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புறக்கணிக்க முடியாது", என்றும் பட்கர் கூறினார்.

பட்கருடன், கீதா ராமகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி. உதயகுமார் போன்ற பிற ஆர்வலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய பட்கர், வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை அழித்தால் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் எப்படி வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

“அரசால் திணிக்கப்படும் வளர்ச்சிக்கு மக்கள் பலியாகிவிட முடியாது. அவர்கள் வாழ்வாதாரத்திற்காக ஒரு சர்வதேச விமான நிலையம் தேவையில்லை," என்று அவர் கூறினார்.

அரசியலமைப்பின் விதிகள் 243 வது பிரிவின் கீழ், கிராம சபைக்கு அதன் சொந்த வளர்ச்சியைத் திட்டமிடுவதற்கான உரிமையை தெளிவாக வழங்கியுள்ளன. இருப்பினும், ஜனநாயக விரோதமான முறையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பரந்தூரை அழிக்கும் வகையில் விமான நிலையத் திட்டம் வலுக்கட்டாயமாக செயல்படுத்தப்படுகிறது,” என்றார்.

தொழிற்பேட்டைகள், விமான நிலையங்கள் போன்ற விவசாயம் அல்லாத காரணங்களுக்காக, தரிசு நிலங்களைத் தேடுவது ஆட்சியர் மற்றும் அரசு நிர்வாகத்தின் கடமை என்று அவர் கூறினார்.

“இந்தப் பகுதியை விமான நிலையத்துக்கு வைத்திருக்க அரசு ஏன் ஆர்வமாக இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. 13 கிராமங்கள் இந்த திட்டத்தினால் பாதிக்கப்படப் போகின்றன.

பாதிப்பு மதிப்பிடப்படவில்லை என்பது தெளிவாகிறது. சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அவசியம். கிராம சபையின் பங்கும் உரிமைகளும் முக்கியமானவை மற்றும் மதிக்கப்பட வேண்டியவை, அது இங்கு நடக்கவில்லை. இங்கு மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

அவர்கள் எப்படி அச்சுறுத்தலை உணராமல் இருக்க முடியும்? அவர்கள் (அரசு) டெண்டர்களை அழைக்கிறார்கள், ஆனால் இங்குள்ள மக்களுக்கு எதுவும் சொல்லவில்லை, அதனால்தான் கடந்த 219 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது, ”என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment