/indian-express-tamil/media/media_files/2025/07/02/park-try-2025-07-02-13-43-51.jpg)
சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 22.50 ஏக்கர் இடத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் பசுமை பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு பசுமை பூங்கா உருவாக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் பசுமைப்பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி கவனித்து வந்தது. இதனால் அதனைச்சுற்றியுள்ள சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் காலை, மாலை வேலைகளில் நடைபயிற்சிக்காகவும், பொழுது போக்கும் சோலையாகவும் இதனை பயன்படுத்தி வந்தனர்.
சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 22.50 ஏக்கர் இடத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் பசுமை பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு பசுமை பூங்கா உருவாக்கப்பட்டது.
சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 22.50 ஏக்கர் இடத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் பசுமை பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு பசுமை பூங்கா உருவாக்கப்பட்டது.
இந்த பூங்காவில் நடைபாதைகள், அணுகுசாலைகள், மூலிகை செடிகள், தியான மண்டபம், சிறு அளவிலான விலங்கியல் பூங்கா, மண்திடல், சைக்கிள் ஓட்டும் தளம், உலக அதிசயங்களின் மாதிரிகள் அமைக்கப்பட்டது. மேலும், நகர்ப்புற பசுமைக்காடுகள் திட்டத்தில் இங்கு 3.50 ஏக்கர் பரப்பளவில் 1,432 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி அரங்கம் போன்றவை அமைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பசுமைப்பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி கவனித்து வந்தது. இதனால் அதனைச்சுற்றியுள்ள சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் காலை, மாலை வேலைகளில் நடைபயிற்சிக்காகவும், பொழுது போக்கும் சோலையாகவும் இதனை பயன்படுத்தி வந்தனர்.
இந்தப்பூங்கா அமைக்க மாநகராட்சி தனது பங்களிப்பாக ரூ.1 கோடியும், பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.50 லட்சமும் நிதி வசூல் செய்யப்பட்டு பசுமைப்பூங்கா ரூ.1.50 கோடியில் உருவக்கப்பட்டிருந்தது. பசுமை பூங்காவைப்பார்த்த தன்னார்வலர்கள், வணிக நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரும் பூங்காவை செழுமைப்படுத்த தங்களால் இயன்றதை செய்து வந்தனர். பசுமை ஆர்வலர்கள் பலரும் பூங்காவில் நடப்பட்டிருந்த மரங்களை பாதுகாப்பாக வளர்க்க தனிநபர் பங்களிப்பாக ரூ.3 ஆயிரம் வீதம் வசூல் செய்து அதை தனியார் வங்கியில் டெபாசிட் செய்து அதில் கிடைக்கும் வருவாயை வைத்து மரங்களையும், செடிகளையும் வளர்க்கவும், பராமரிக்கவும் செலவிடப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், பூங்காவை பராமரிக்க மாநகராட்சி உரிய பணியாளர்களை நியமிக்கவில்லை. இதனால் பசுமைப்பூங்காவில் சிறுவர்கள் விளையாட அமைக்கப்பட்ட பல்வேறு உபகரணங்கள் களவாடப்பட்டது. மரங்களை தவிர மற்ற பொருட்கள் களவாடப்பட்டதால் பசுமைப்பூங்கா செழிப்பில்லாமல் இருந்தது.
இந்த நிலையில் 2021-ல் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்தப்பகுதியில் கனரக சரக்கு வாகனங்கள் முனையம், காய் கனி மார்க்கெட் அமைக்கப்படும் என அறிவித்து அதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்தியது.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகள் துவங்கியவுடன் அதன் அருகிலேயே கனரக வாகன சரக்கு முனையத்திற்கான பணிகளை துவக்கியது. அதேபோல் பஞ்சப்பூர் அருகே உள்ள பசுமைப்பூங்காவை அழித்து விட்டு அங்கே காய் கனி மார்க்கெட் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாத திருச்சி மாநகராட்சி கடமையே கண்ணாக காய் கனி மார்க்கெட் அமைக்க பசுமைப்பூங்காவில் இருந்த சுமார் 237 மரங்களை வேருடன் பிடுங்கி மன்னார்புரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் மறு நடவு செய்யும் பணிகளை மேற்கொண்டது. ஆனால், அந்த மரங்கள் வேரூன்றி வளராமல் காய்ந்துப்போனது.
இந்த நிலையில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச்சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர் பஞ்சப்பூர் அருகே உள்ள பசுமைப்பூங்காவை அழித்துவிட்டு காய் கனி மார்க்கெட் கட்டும் பணிகளை துவங்கிய மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்த்தும், காய் கனி மார்க்கெட்டுக்காக கையகப்படுத்திய இடத்தை மீண்டும் பசுமைப்பூங்காவாக மாற்றக்கோரியும், காய் கனி மார்க்கெட் கட்டுமானத்தை தடைசெய்யக்கோரியும் கடந்தாண்டு 2024-ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் கொண்ட அமர்வு பசுமைப்பூங்கா தொடர்பான அனைத்து விவரங்களையும் பார்த்து ஆராய்ந்து பின்னர் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் செயலாளர், நிதிச்செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, பசுமைப்பூங்காவுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் வழங்கியது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மக்கள் அளித்த நன்கொடையால் உருவான பசுமைப்பூங்காவை பராமரிக்கும் பொறுப்பு மாநகராட்சிக்கும், அரசுக்கும் உண்டு. பசுமைப்பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகக்கூறி மார்க்கெட் கட்ட பரிந்துரைத்தோம் எனக்கூறும் கூற்றை ஏற்க முடியாது. ஒரு பூங்கா உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை பாதுகாக்கும் பொறுப்பும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.
பஞ்சப்பூர் அருகே உள்ள மொத்தமுள்ள இடத்தில் 11 ஏக்கர் நிலத்தை பாதுகாப்பு பசுமைப்பூங்காவுக்கு ஒதுக்க வேண்டும். அனைத்து வசதிகளுடன் கூடிய பசுமைப்பூங்காவை மேம்படுத்தி மக்கள் பயன்பெறும் வகையில் விரைவில் மாவட்ட நிர்வாகம் திறக்க வேண்டும். பூங்காவுக்கு வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பஞ்சப்பூர் பசுமை பூங்காவை அரசு மார்க்கெட்டாக மாற்றும் முயற்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சம்மட்டியால் அடித்திருப்பதை சமூக ஆர்வலர்கள், பசுமை ஆர்வலர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சந்திரசேகர், மாநகராட்சி மேயரிடம் கடந்த 2022-லேயே பசுமைப்பூங்காவில் உருவாக்கப்பட்ட விலையாட்டுப்பொருட்கள் சேதமடைந்தது குறித்தும், மாநகராட்சி பசுமைப்பூங்காவை சரியாக பராமரிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியும் மனு கொடுத்தேன். அதேபோல், மார்க்கெட் கட்டுமானப்பணிகளை கைவிடக்கோரியும் மனு கொடுத்தேன். அதற்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்லாததால், நீதிமன்றத்தை நாடினோம். நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கின்றது. ஓய்வு நேர பொழுதுபோக்கு இடமாக மட்டுமல்லாமல், மாநகராட்சியின் மிகப்பெரிய பசுமைப்பூங்காவாக இந்தப்பூங்கா இனி மாறும் சூழலை உருவாக்கும் நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியே என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.