New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/09/AT7s1J4ejcWvabEsbyND.jpg)
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் கழிவுர் நீர் மற்றும் குவிந்துள்ள திடகழிவுகள் நிறைந்த தண்ணீர் அனைத்தும் சூழப்பட்டு இருக்கின்றன.
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் கழிவுர் நீர் மற்றும் குவிந்துள்ள திடகழிவுகள் நிறைந்த தண்ணீர் அனைத்தும் சூழப்பட்டு இருக்கின்றன.
நிலத்தடி நீர் மிக சுத்தமாக இருந்தால் மட்டுமே பல்வேறு பயன்பாட்டிற்கு நம்மால் பயன்படுத்த முடியும் ஆனால், கோவையில் தற்போது நிலத்தடி நீர் மட்டும் பெரிய அளவுக்கு மாசடைந்து உள்ளது .
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் கழிவுர் நீர் மற்றும் குவிந்துள்ள திடகழிவுகள் நிறைந்த தண்ணீர் அனைத்தும் சூழப்பட்டு இருக்கின்றன.
இது குறித்து கோவை சிறுதுளி அமைப்பினர் ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி, வனிதா மோகன் மற்றும் சதீஷ் ஆகியோர் வாலாங்குளம் பகுதியில் அமைந்துள்ள சிறுதுளி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
“கோவையில் உள்ள பல்வேறு குளங்களை சிறுதுளி அமைப்பு சார்பில் அரசு துணையுடன் தூர்வாரி சுத்தம் செய்து கொடுத்திருந்தோம். அப்படிப்பட்ட சூழலிலே நிலத்தில் நீர் மட்டும் கொஞ்சம் உயரப்பட்ட நிலத்தின் நீரும் சுத்தமான இந்த முறையில் கிடைத்தது. ஆனால், தற்போது மீண்டும் பல்வேறு நிலைகளில் கழிவுநீர் கலந்தும் திடக்கழிவுகளை குவிக்கப்பட்டும் உள்ளதால் நிலத்தடி நீர் அபாயகரமான சூழலில் உள்ளது.
போர்வெல் தண்ணீரை கூட பயன்படுத்த முடியாத ஒரு மோசமான சூழ்நிலையில் இருப்பதாகவும் கோவை குளங்களில் தேங்கி உள்ள கழிவுநீரால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை சரி செய்ய வேண்டுமென்றால் மீண்டும் கோவையில் உள்ள அனைத்து குளங்களும் முற்றிலுமாக தூர்வாரப்பட வேண்டும். அதில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும் அதை வேறு பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கும் என்னென்ன வழிமுறை என்று அரசு உடன் இணைந்து சிறுதுளி சார்பில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றோம் என்று தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் கூறுகையில் அபாயகரமான உள்ள குளங்களின் மூலமாக நோய்தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பாக சிறு குழந்தைகள்முதல் பெரியவர் கள் கோவையில் நூரையிரல் நோய் பாதிப்பும் தோல் வியாதிகளும் அதிகரித்துள்ளது.
எனவும் ஒவ்வொரு குளங்களிலும் 10 முதல் 20 அடிக்கு குறைவில்லாமல் திடக்கழிவுகளின் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளதாகவும் அதை முற்றிலுமாகவும் எடுக்கவும் ஆகாயத்தாமரைகளை மீண்டும் குளத்தில் வளராமல் இருப்பதற்கான வழிமுறைகளில் கொண்டு வர வேண்டிய சூழல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்
வருங்காலத்தில் இந்த போன்று சூழலை தொடராமல் இருக்க வேண்டும் என்றால் மாவட்டத்தில் உள்ள எல்லா குளங்களையும் சுழற்சி முறையில் தூர்வாரப்பட வேண்டும் என்பதுதான் இவர்களது கோரிக்கையாக இருக்கின்றது.
வலுப்பெற்ற வலிமையான கோவை சர்வதே நாடுகள் வரை புகழ் பெற்ற மாவட்டம் கோவையின் இயற்கை அடையாளங்களல் ஒன்றான குளங்களும் நீர்நிலைகளும் தான்.
ஆனால் இப்பொழுது கோவை நீர் நிலைகளும் குளங்களும் மிகவும் அபாயகரமான சூழலில் இருக்கின்றது வருத்தமாக உள்ளது. எனவே குடிநீரில் விஷம் கலக்கமால் இருக்க அரசு நிதியை பயன்படுத்தி நீர் நிலைகளை காக்க வேண்டும் என்பதே சிறுதுளி அமைப்பினர் சமூக ஆர்வலர்கள் மற்றும் கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.