Advertisment

வி.சி.க-வின் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி… தலைவர்கள் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், திருமாவளவன், கீ. வீரமணி, வைகோ, கே. பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

author-image
WebDesk
Oct 11, 2022 19:03 IST
New Update
vck rally, Social Harmony Human Chain Rally, VCK, Thirumavalavan, DMK alliance Leaders Participates, விசிக, திருமாவளவன், சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பேரணி, சென்னை, வேல்முருகன், வைகோ, ஜவாஹிருல்லா, முத்தரசன், பாலகிருஷ்ணன், K Balakrishnan, Muththarasan, Vaiko, Velmurugan

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், திருமாவளவன், கீ. வீரமணி, வைகோ, கே. பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisment

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தும் என திருமாவளவன் அறிவித்து இதில் விருப்பமுள்ள அரசியல் கட்சிகள் கலந்துகொள்ளலாம் என்று அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, ஆளும் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ, ம.ம.க, த.வா.க, நா.த.க, ம.நீ.ம மற்றும் தி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்து சமூக நல்லிணக்க பேரணியில் கலந்துகொள்வதாக அறிவித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி விசிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பேரணி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகே சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வி.சி.க தலைவர் திருமாவளவன், தி.க தலைவர் கீ. வீரமணி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா, த.வா.க தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் பங்கேற்றனர்.

மதுரையில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த எம்.பி, சு.வெங்கடேசன் தலைமையில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பேரணி நடைபெற்றது. இதில் விசிக, சி.பி.எம், காங்கிரஸ், ம.ம.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்றன. சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பேரணிக்கு தலைமை வகித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசியதாவது: “தமிழ்நாட்டில் அரசியல் பதற்றத்தை உருவாக்க வேண்டும். வெறுப்பை உருவாக்கி அதில் வாக்கு வங்கி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்படுகிறது. இந்த பேரணியில் சேர்ந்த கைகள் மனித கைகள் அல்ல, பகுத்தறிவு கரங்கள். இந்த பேரணி வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டும்” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Thirumavalavan #Congress #Vck #Vaiko
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment