New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/rowdy-baby-surya-3.jpg)
சமூக வலைதள பிரபலம் ரவுடி பேபி சூர்யா
சமூக வலைதள பிரபலம் ரவுடி பேபி சூர்யா
Rowdy Baby Surya arrested: டிக் டாக் சமூக வலைதளம் மூலமாக மக்களிடையே பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் சிக்கந்தர் என்பவரோடு தற்போது வாழ்ந்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
இளம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ள முயற்சித்தார் என்ற புகாரும் உள்ளது. இந்த வழக்குகளில் ஜாமின் பெற்று வெளியில் சுற்றி திரிகிறார்.
எனினும் இவர் தற்போது யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளார். இவரது ஆண் நண்பரைான சிக்கந்தர் என்பவரோடு இவர் செய்யும் சேட்டைகள் அத்துமீறல்கள்.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ரவுடி பேபி சூர்யா மீது மதுரை காவல் ஆணையரிடம் ஆக.22ஆம் தேதி புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண்நண்பர் சிக்கந்தர் உள்பட 4 பேர் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை விசாரித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஜோடியை கைதுசெய்தனர். இவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த வழக்கில் மொத்தம் 4 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடி பேபி சூர்யா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர் ஆவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.