அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை தாக்கி, பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டிய பா.ஜ.க பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் சென்ற மாநகர அரசு பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென அந்த பேருந்தை வழி மறித்த நடிகை ரஞ்சனா நாச்சியார், படியில் பயணம் செய்த மாணவர்களை கீழே இறங்கச் சொல்லி சாராமரியாக தாக்கியுள்ளார். மேலும் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, பேருந்தின் ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் சென்னை மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ரஞ்சனாவின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது அரசு பேருந்தை வழி மறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அவரை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்றபோது ரஞ்சனா நாச்சியார் வீட்டில் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனாலும் அவர் வீட்டில் இருப்பதை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்ய தீவிரம் காட்டியுள்ளனர். கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியார் பா.ஜ.க.,வின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறார்.
இந்தநிலையில், ரஞ்சனாவின் கைதுக்கு எதிராகவும், ஆதராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அநியாயம் நடக்கும் போது பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதை இனிமேலாவது தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இத்தேசத்தின் காவலர்களே! என ஒரு பதிவர் பதிவிட்டுள்ளார்.
அநியாயம் நடக்கும் போது பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதை இனிமேலாவது தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இத்தேசத்தின் காவலர்களே!
— Yoganand Pandian (@yoganandpandian) November 4, 2023
பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கண்டித்தது தவறா ?
— Skonar (@SundaramKonar3) November 4, 2023
மாணவர்களுக்கு எதாவது தவறு நிகழ்ந்தால் அவர்களின் பெற்றோருக்கு யார் பதில் சொல்வார்கள். அந்த லேடி போலிஸ் என்று பொய்சொன்னதால் தான் மாணவர்கள் பயந்து கீழே இறங்கினார்கள்.இது கூட காவலர்களுக்கு தெரியவில்லையா ?
வீடியோ பாத்த உடனே நான் சொல்லிட்டேன்... கட்டாயம் இவங்கள கைது பண்ணுவாங்க அப்படின்னு... கவர்மெண்ட் ஸ்கூல் பிள்ளைகளை அடிக்காம வச்சிருக்கோம் நாங்க... இப்படி பப்ளிக் பிளேஸ்ல வந்து ஒரு பையனை எப்படி அடிக்கலாம். சம்பவத்துக்கு யாரெல்லாம் வாழ்த்து சொன்னிங்களோ 🫣🤣
— Srinivasan Manickam (@ManicSrini) November 4, 2023
அந்த அம்மா செய்தது 100% சரியே! இதே அந்த பையன்கள் கீழே விழுந்து விடும் பொழுது சிலபேர் நடத்துநர் மேல் சீருவார்கள் பாரு.... அப்ப இந்த police எதுவும் கிட்ட வராது...
— Ananth (@a7f24954c0764ec) November 4, 2023
எல்லாரும் அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று தமிழ்நாடு முழுவதும் இறங்கி அடிக்கலாம். அது ரவுடித்தனம் தான். நான் எல்லோரையும் கேள்வி கேட்கிறேன் என்று பொதுவெளியில் இறங்கினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ன?
— Jayakanthan Sangee (@JK_Sangee) November 4, 2023
நாய் என்று திட்டுவது, அடிப்பது எல்லாம் அத்துமீறல்! நோக்கம் உண்மையானதாக தோன்றவில்லை. திட்டமிட்டு நாடகம் நடத்தப்பட்டதாகவே தோன்றுகிறது.
— ASR (@kannanasrfruits) November 4, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.