scorecardresearch

Hai guys சூரிய கிரகணத்தை பாத்து ரசிச்சீங்களா…. சந்தோசமா இருந்துச்சா..

December 26 Tsunami anniversary : டிசம்பர் 26னு சொன்னதுமே, நிறைய பேருக்கு கிறிஸ்துமஸ், பொறக்கப்போற புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை இதுக தான் ஞாபகத்துக்கு வரும்.

december, tsunami, tsunami anniversary, solar eclipse, solar eclipse 2019, pm modi, ground water level, new year 2020, celebration
december, tsunami, tsunami anniversary, solar eclipse, solar eclipse 2019, pm modi, ground water level, new year 2020, celebration, சுனாமி பேரலை, சுனாமி நினைவு தினம், சூரிய கிரகணம், பிரதமர் மோடி, நிலத்தடி நீர் மட்டம், புத்தாண்டு, புத்தாண்டு 2020

டிசம்பர் 26னு சொன்னதுமே, நிறைய பேருக்கு கிறிஸ்துமஸ், பொறக்கப்போற புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை இதுக தான் ஞாபகத்துக்கு வரும்.

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

டிசம்பர் 26 தேதி ஆயிருச்சு, இன்னும் புது வருசம் ( 2020) பொறக்க இன்னும் 5 நாள்தான் இருக்கு. ஐ ஜாலி என்று சொல்றவங்களவிட, ஐயோ இன்னும் ஒருவருசம் கூடிருமே என்று அங்கலாய்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
ஓகே, வாங்க இன்னைய நிகழ்ச்சிக்கு போவோம்.

டிசம்பர் 26னு சொன்னதுமே, நிறைய பேருக்கு கிறிஸ்துமஸ், பொறக்கப்போற புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை இதுக தான் ஞாபகத்துக்கு வரும்.

Hai guys – டிசம்பர் 25, எத்தனை விசேஷங்கள் தெரியுமா, வாங்க தெரிஞ்சுக்கலாம்

அதைவிட முக்கியமான விசயங்கள்ல , 2004ம் ஆண்டு இந்த தினத்தில்தான், சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இந்தோனேஷியா, இலங்கை, இந்தியாவில் சென்னை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் மரணம் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்னைக்கு அரிய வகை வளைவு சூரிய கிரகணம் நிகழ்ந்துருக்கு, மதுரை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில்,இந்த சூரிய கிரகணத்தை மக்கள் பார்த்து ரசித்தனர். கோவை, திருப்பூர் பகுதிகளில் மேகமூட்டம் காரணமாக, மக்கள் கிரகணத்தை பார்க்க முடியலயேனு வருந்துறது தெரியுது, விடுங்க பாஸ். அதான் பேஸ்புக், வாட்ஸ் அப்ல நண்பர்கள் அனுப்பியிருப்பாங்க, பாத்து சந்தோசப்பட்டுக்கோங்க…

Hai guys….: இன்று ( டிசம்பர் 24) பெரியார், எம்ஜிஆர் நினைவுநாள்

நம்ம பிரதமர் மோடியும், டில்லியில் நிலவிய மேகமூட்டம் காரணமாக கிரகணத்தை பார்க்க முடியலனு டுவிட்டர்ல போஸ்ட் போட்டிருக்காரு..

கிரகணம் முடிஞ்சிருச்சு, போங்க நல்ல பிள்ளையா மத்த வேலைகளை பார்க்க ஆரம்பிங்க.

உங்க வீட்டு போர்வெல் மோட்டார்ல தண்ணி வருதா, எங்க வீட்ல வரல, தண்ணி வத்திருச்சுனு நினைக்குறேன், போர் போடணும்ங்குற பேச்சு கொஞ்சநாளா நாம கேட்டுட்டு வர்றது தான். இந்த நிலைமை நம்ம ஊர்ல மட்டும் கிடையாதாம். உலக அளவுல இந்த பிரச்னை இருக்குறதா, 92 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், நீர்வள நிபுணர்கள் தங்களோட ஆய்வுல சொல்லியிருக்காங்க…

ஓகே guys நாளைக்கு வேற செய்திகளோட மீட் பண்ணுவோம் bye bye…

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Solar eclipse 2019 annual solar eclipse tsunami anniversary modi december new year

Best of Express