Annual solar eclipse 2019 : தமிழகத்தில் மதுரை, திருச்சி, சென்னை, கரூர், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது. ஊட்டியில் முழு சூரிய கிரகணம் 9.26 முதல் தெரிந்தது. மற்ற பகுதிகளில் வளைய சூரிய கிரகணம் மற்றும் பகுதி சூரிய கிரகணம் தெரிந்தது. தமிழகத்தில் 90 சதவீதம் சூரிய கிரகணம் தென்பட்டது. இதனால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. கிரகணம் விலகியதும், முழுமையாக சூரியனை பார்க்க முடியும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
சூரிய கிரகணம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிறத்தில் தோன்றுகிறது. ஊட்டியில் சிவப்பு நிறத்திலும், ஒடிசாவில் ஊதா நிறத்திலும் தோன்றுகிறது. கத்தார், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும், இந்தியாவில் ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் சூரிய கிரகணம் தெரிகிறது.













தமிழகம் மட்டுமல்லாது குஜராத், கேரளா, ஒடிசா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வளைவு சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மக்கள் அதன் உதவியால், சூரிய கிரகண காட்சிகளை பார்த்து மகிழ்ந்தனர்.