கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, திமுக ‘மகளிர் உரிமை மாநாடு’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் திமுக எம்.பி. கனிமொழி முன்னிலை வகிக்க, தேசிய அளவிலான 9 பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சோனியா காந்தி, பிரியங்கா காந்தி நேற்றிரவு சென்னை வந்தனர். இருவரும் கிண்டி ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கி உள்ளனர்.
சோனியா காந்தி 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தமிழ்நாடு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் ஹோட்டலில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/EBEweEoh9FxT2LD8m0Dj.jpg)
இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதரணி, பிரின்ஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், மகளிர் இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்து பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங். எம்எல்ஏ விஜயதாரணி, ‘காங்கிரஸ் கட்சியின் அடுத்த வளர்ச்சி கட்டத்தை, எட்டக்கூடியதாக இந்த கூட்டம் அமைந்திருந்தது.
கூட்டணி பொறுத்தவரை ஆழமான கருத்துடன் இருக்கிறார்கள், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ஜனவரி மாதம் தான் பேசப்படும். மாநிலத்தலைவர் மாற்றம் உள்ளதா என்பது குறித்த கேள்விக்கு, கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது, அது குறித்து இனிவரும் காலங்களில் முடிவெடுக்கப்படும், என்று கூறினார்.
மேலும் மாணிக்கம் தாகூர் கூறுகையில், I.N.D.I.A கூட்டணி பலமானதாக இருக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் கட்சி வலிமையாக களத்தில் பேச வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக, கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“