திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம் : பக்தர்கள் பரவசம்
Soorasamharam : கந்தசஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் வீற்றிருக்கும் கோயில்களில் பக்தர்களின் சரண கோஷங்களுக்கு இடையே வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கந்தசஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் வீற்றிருக்கும் கோயில்களில் பக்தர்களின் சரண கோஷங்களுக்கு இடையே வெகுவிமரிசையாக நடைபெற்றது.
Advertisment
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று (நவ.,2) நடைபெற்றது. சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன், தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முகவிலாச மண்டபத்தில் காட்சியளித்தார். மாலை, 4:30 மணிக்கு, கோவில் கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் முன்னிலையில், கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மனாய் அடுத்தடுத்து வலம் வந்து ஆணவத்துடன் போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் தன்னுடைய வேலால் சம்ஹாரம் செய்தார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.
உண்ணாவிரதம் முடித்த பக்தர்கள் : பின்னர், சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை, சுவாமி தன்னுடைய சேவற்கொடியாகவும், மாமரமாகவும் ஆட்கொண்டார். ஆறு நாள் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, விரதத்தை முடித்தனர். தமிழகம் முழுவதும் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர்.