பாஜக ஆட்சிக்கு எதிராக கோஷமிட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்ட மாணவி சோபியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சோபியாவின் கோஷம்:
நேற்று (3.9.18) மாலை தூத்துக்குடி விமான நிலையத்தில் ’பாசிக பாஜக ஓழிக’ என்று கோஷமிட்ட மாணவி சோபியா குறித்துத் தான் ஒட்டுமொத்த தமிழகமும் பேசிக் கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட மாணவி சோபியா போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று கோஷமிட்டனர். அவரின் இந்த கோஷம் தான் தற்போது இணையத்தில் அனைவரலாலும் பகிரப்பட்டு வரும் ஹாஷ்டேக்காக மாறி வருகிறது. மருத்துவரின் மகளான சோபியா கனடாவில் படித்து வருகிறார்.
விடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பிய அவருக்கு இப்படியொரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். நேற்று இரவு தூத்துக்குடி மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சோபியாவை விடுவிக்குமாறு இணையதளத்தில் ஆதரவுகள் பெருகி வருகின்றன. ஸ்டாலின், டிடிவி தினகரன், இயக்குனர் பா.ரஞ்சித் போன்றோர் சோபியாவை விடுதலை செய்யும்படி ட்விட்டர் பக்கத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.
சோபியாவின் தந்தை
இந்நிலையில், தமிழிசைக்கு எதிராக சோபியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள்ளார். இந்த புகார் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
இந்த புகாரில் சோபியாவின் தந்தை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.புகாரில் அவர் கூறியிருப்பதாவது, “ என் மகள் சோபியா விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசையை பார்த்த உடன் பாஜகவிற்கு எதிராக கோஷமிட்டார். என் மகள் கோஷமிட்டதை கேட்டுவிட்டு முதலில் தமிழிசை அமைதியாக இருந்தார். விமானம் இறங்கும் வரை அவர் அமைதியாக இருந்தார்.
அதன்பின் விமான நிலையத்தில் பயணிகள் அமரும் அறைக்கு வந்த பின் தனது தொண்டர்களிடம் இதுபற்றி கூறினார். அவர் தனது தொண்டர்களை தூண்டிவிட்டார் என் மகளை 10 பாஜகவினர் பேர் சுற்றிக்கொண்டு நின்றார்கள். மிகவும் தகாத வார்த்தைகளில் வெளியே வா உன்னை கொல்லாமல் விடமாட்டோம்'' என்று திட்டினார்கள்.
இவளையும், இவள் குடும்பத்தையும் சும்மா விட கூடாது என்று பாஜக தலைவர்கள் தொண்டர்களிடம் கூறினார்கள். பின் என்னை, என் மனைவியை, மகள் சோபியாவை தகாத வகையில் புகைப்படம் எடுத்தார்கள். இதனால் எங்களை மறித்து இத்தனை இடையூறுகளை செய்த பாஜகவினர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.