சோபியா ஜாமீன் : தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட மாணவி சோபியாவிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்.
நேற்று தமிழிசை சௌந்தரராஜனுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை பயணித்த மாணவி சோபியா, கனடாவில் படித்து வருகிறார். அவர் தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்தவுடன் விமானத்தில் “பாஜக ஆட்சி ஒழிக, பாசிச ஆட்சி ஒழிக” என்று கோஷம் எழுப்பியுள்ளார்.
சோபியாவின் கைது குறித்து முழுமையான செய்தியைப் படிக்க
சோபியா ஜாமீன் : நிபந்தனையற்ற ஜாமீனில் வெளிவந்தார்
அதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த செயலுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழிசை புகார் அளித்தார். அதன் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர், சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பாசிச பாஜக என கருத்து பதிவு செய்த ஸ்டாலின்
அப்போது, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்ட குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது விசாரித்த தூத்துக்குடி நடுவர் நீதிமன்ற நீதிபதி சோபியாவிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி விடுதலை செய்தார்.