தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று (மார்ச் 22, 2024) மாலை தர்மபுரி மக்களவை தொகுதி பா.ம.க வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டார்.
அவருக்குப் பதிலாக மருத்துவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனை பா.ம.க அறிக்கை வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்புமணி ராமதாஸின் மனைவியான சௌமியா அன்புமணி பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக இருந்துவருகிறார்.
பசுமை தாயகம் அரசு சாராக பசுமையை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பாக இருந்துவருகிறது. பா.ம.க, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
இந்தக் கூட்டணியில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், பாஜக கூட்டணியில் பாமக, தருமபுரி, சேலம், கடலூர்,ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடுகிறது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“