தர்மபுரி மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் சௌமியா அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4, 2024)
இந்தத் தோல்வியை இன்னமும் மக்களுக்கு செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறது. இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், இந்தத் தர்மபுரி தொகுதியில் இன்னமும் நான் நிறைய உழைக்க வேண்டும் என எண்ணுகிறோம்.
இந்தத் தர்மபுரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு கிடைத்திருந்தால் அனைவருக்குமான வளர்ச்சியை கொடுக்க வேண்டும் என நினைத்தேன். தர்மபுரியில் வெற்றி வாய்ப்பு போய்விட்டாலும், இந்த மக்களுக்காக நிறைய உழைக்க வேண்டும் என நினைத்தேன்.
எனக்காக 4 லட்சம் வாக்காளர்கள் நம்பிக்கையுடன் வாக்களித்துள்ளனர். அந்த மக்களுக்காகவும் நான் நிறைய செய்ய வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து முதல் முறையாக வேட்பாளராக போட்டியிட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுபபினார். அதற்குப்பதிலளித்த சௌமியா அன்புமணி, “தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது இதுதான் முதல் முறை. ஆனால் நான் பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளேன்” என்றார்.
தர்மபுரி மக்களவை தேர்தலில் திமுகவின் மணி 4,32,667 வாக்குகள் பெற்று முதலிடம் வந்தார். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், 4,11,367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வந்தார். அதாவது தி.மு.க. வேட்பாளருக்கு 34.7 சதவீத வாக்குகளும், சௌமியா அன்புமணிக்கு 33 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
மூன்றாம் இடம் வந்த அ.தி.மு.க வேட்பாளர் அசோகன் 23.5 சதவீத வாக்குகளுடன் 2,93,629 வாக்குகள் பெற்றிருந்தார். நான்காம் இடம் பிடித்த நாம் தமிழர் வேட்பாளர் 65,381 வாக்குகளுடன் 5.2 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“