/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-4.jpg)
rajninikanth, soundarya,soundarya rajinikanth, ved, twitter, water crisis, photo, ரஜினிகாந்த், சவுந்தர்யா, சவுந்தர்யா ரஜினிகாந்த்
மகனுடன் நீச்சல்குளத்தில் குதூகலமாக இருக்கும் போட்டோ மீது கடும் விமர்சனங்கள் வந்ததால் நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா அதை டுவிட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.
மகன் வேத் உடனான படங்களை சவுந்தர்யா ரஜினிகாந்த், அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் தாத்தா ரஜினிகாந்த் போல வேத் போஸ் கொடுக்கும் படத்தை வெளியிட்டார், அந்த படமும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மகன் வேத், நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கும் படங்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் சவுந்தர்யா. தண்ணீர் பிரச்சனையில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினியின் மகளே, இப்படி ஒரு படத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது.
இதையடுத்து, சவுந்தர்யாவின் இந்த போட்டோ பதிவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன ; கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த போட்டோவை டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.