தென் ஆப்ரிக்க சாலை விபத்தில் குமரி முந்திரி ஆலை ஊழியர்கள் 2 பேர் மரணம்
விபத்து நடந்த பகுதிக்கு வந்த அந்த நாட்டு காவல்துறையினர், மரணம் அடைந்த இந்தியர்கள் இருவர் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Kaniyakumari | South Africa: தமிழகத்தில் தொழிற்சாலைகளே இல்லாத ஒரே மாவட்டம் கன்னியாகுமரி. குமரி மாவட்ட பகுதிகள் கேரள மாநிலத்தின் பகுதியாக இருந்த வேளையில் அங்கொன்றும், இங்கொன்றும் என சில முந்திரி தொழிற்சாலைகள் இருந்தன. இந்த முந்திரி தொழிற்சாலைகளில் பெண்களுக்கே அதிக வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.
Advertisment
குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த அந்த காலக்கட்டத்தில் தான், குமரியில் ரப்பர் விவசாயம் அதிக அளவில் வளர்ச்சி அடைந்த அந்த காலம். தமிழக முதல்வராக காமராஜர் இருந்த காலத்தில் ஒரு ரப்பர் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. அதனை கடந்து நாகர்கோவிலை அடுத்த களியங்காடு பகுதியில் ஒரு தனியார் நூற்பாலை ஒன்று. அதன் பின்னர் எவ்வித தொழிற்சாலைகளும் இல்லாத குமரி மாவட்டத்தில். முந்திரி தொழிற்சாலைகள் மட்டுமே பெண்களுக்கு வேலை வாய்ப்பின் காரணியாக உள்ளது.
திக்கணங்கோடு பகுதியில் உள்ள முந்திரி தொழிற்சாலையை அதிபர் ரெஜின் நடத்தி வருகிறார். இவரது தென் ஆப்ரிக்காவில் உள்ள அலுவலத்தில், குமரியை சேர்ந்த ஜெயசந்திரசேகர், ஷைபின் அவர்களது முந்திரி தொழிற்சாலைக்கு தேவையான முந்திரி கொள்முதல் செய்வதற்காக தென் ஆப்பிரிக்காவில் உள்ள கானா பகுதியில் ஒரு அலுவலகம் உள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலகத்தை ரெஜினின் மனைவியின் தம்பியான, தக்கலை அருகே உள்ள புங்கறையை சேர்ந்த ஜெயசந்திரசேகர் (42) அவரது உறவினரான வட்டம் பகுதியை சேர்ந்த ஷைபின் (32) என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.
ஷைபின்
Advertisment
Advertisements
கடந்த (ஏப்ரல்-22) தேதி தொழில் தொடர்பாக வாடகை காரில் தென் ஆப்பிரிக்காவில் அக்கிராவில் இருந்து டெமா என்ற இடத்திற்கு வாடகை காரில் சென்று கொண்டிருந்த போது டெமா அருகே எதிரே மணல் ஏற்றிவந்த டிரக்கர் இவர்கள் பயணித்த வாடகை காருடன் மோதியதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த ஷைபினும், ஜெயசந்திரனும் சம்பவ இடத்திலே பலியானார்கள். வாடகை கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஜெயசந்திரசேகர்
விபத்து நடந்த பகுதிக்கு வந்த அந்த நாட்டு காவல்துறையினர், மரணம் அடைந்த இந்தியர்கள் இருவர் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமரியில் உள்ள உறவினர்களுக்கு, ஜெயசந்திரன், ஷைபின் விபத்து மரணம் பற்றி தகவல் தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் டெமா பகுதியில் சாலை விபத்தில் மரணம் அடைந்த இருவரின் பூத உடல் எதிர் வரும் (திங்கட்கிழமை-29)ம் நாள் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கார் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. தென் ஆப்ரிக்காவில் நடந்த சாலை விபத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: த.இ.தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“