/indian-express-tamil/media/media_files/WhgMiNAVMRb07QSipqTA.jpg)
பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்
தென்சென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஏப்ரல் 14) அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களிடம் ஜூம் மீட்டிங்கில் ஓட்டு சேகரித்தபோது, விஷமிகள் ஆபாச படம் பரப்பியதற்கு தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி பெறுகிறது. இதில் தென்சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், பா.ஜ.க சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் செல்வி மற்றும் பல சுயேட்சைகள் களமிறங்கி உள்ளனர். மேலும், தேர்தல் தேதி நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருடன் ஜூம் மீட்டிங் மூலம் வாக்கு சேகரித்தார். இந்த மீட்டிங்கின்போது ஆபாசமான படங்களை சில விஷமிகள் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து அந்த மீட்டிங் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் தமிழிசை சவுந்தரராஜன் வருத்தமடைந்தார். மேலும் இந்த சம்பவத்துக்கு தமிழிசை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், ”இன்று Zoom மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை Zoom மீட்டிங்கில் பரவ விட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.
இன்று Zoom மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை Zoom மீட்டிங்கில் பரவ விட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள். pic.twitter.com/6DMhH3H3d5
— Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் ) (@DrTamilisai4BJP) April 14, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.