Advertisment

South Chennai Lok Sabha Results 2024: தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி

2024 மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதி நிலவரம், அதன் வரலாறு கடந்த காலங்களில் கோலோச்சிய அரசியல் கட்சிகள் தொடர்பான பல்வேறு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
south Chennai Election Results 2024 Updates

2024 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2024 மக்களவை தேர்தல் நாட்டில் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்.19ஆம் தேதி தொடங்கியது. நிறைவுகட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது. இந்த 7 கட்டங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டது.

Advertisment

முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில், தென்சென்னையில் 27,177 வாக்குகள் பெற்று தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தார். தமிழிசை இரண்டாம் இடத்தில் காணப்பட்டார்.

தென் சென்னை மக்களவை தொகுதி

தமிழ்நாட்டின் மூன்றாவது மக்களவை தொகுதி என்ற பெருமையை தென் சென்னை பெறுகிறது. 2008ஆம் ஆண்டில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இத்தொகுதியில், தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. இந்த மக்களவ தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.

சட்டமன்ற தொகுதிகள்

  • விருகம்பாக்கம்
  • சைதாபேட்டை
  • தியாகராய நகர்
  • மைலாப்பூர்
  • வேளச்சேரி
  • சோழிங்கநல்லூர்

இந்தத் தொகுதியில் அதிகப்பட்சமாக 62.66 சதவீதம் வரை வாக்குகள் 2009 மக்களவை தேர்தலில் பதிவாகின. 2019ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி 9,61,904 ஆண்களும், 9,73,934 பெண்களும் வாக்காளர்களாக உள்ளனர்.

ஆண்டு வெற்றி பெற்றவர்கள்  கட்சி
1957 டி. டி. கிருஷ்ணமாச்சாரி காங்கிரஸ்
1962 நாஞ்சில் கி. மனோகரன் திமுக
1967 சி.என். அண்ணாத்துரை திமுக
1967 முரசொலி மாறன் திமுக
1971 முரசொலி மாறன் திமுக    
1977 இரா. வெங்கட்ராமன் இந்திரா காங்கிரஸ்
1980 இரா. வெங்கட்ராமன் இந்திரா காங்கிரஸ்
1984 வைஜயந்திமாலா பாலி காங்கிரஸ்
1989 வைஜயந்திமாலா பாலி காங்கிரஸ்
1991 ஆர். ஸ்ரீதரன் அதிமுக
1996 டி.ஆர். பாலு திமுக
1998 டி.ஆர். பாலு திமுக
1999 டி.ஆர். பாலு திமுக
2004 டி.ஆர். பாலு திமுக
2009 சி. ராஜேந்திரன் திமுக
2014 ஜெ. ஜெயவர்த்தன் அதிமுக
2019 தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக

2024 மக்களவை தேர்தல் போட்டியாளர்கள்

2024 மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் 54.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது இந்தத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க சார்பில் ஜெயவர்தன், நாம் தமிழர் கட்சி தரப்பில் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் களத்தில் இருந்தனர்.

தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி

தமிழச்சி தங்கபாண்டியன் (தி.மு.க) 513974
தமிழிசை சௌந்தரராஜன் (பா.ஜ.க) 289019
ஜெயவர்த்தன் (அ.தி.மு.க) 1,17,274
தமிழ் செல்வி (நாம் தமிழர்) 83,391

தென் சென்னை தொகுதி திமுக வசம் அதிக முறை இருந்துள்ளது. மொத்தம் 7 முறை திமுக வென்றுள்ளது. அடுத்தபடியாக இதை காங்கிரசு 5 முறை கைப்பற்றியுள்ளது. இங்கு அதிமுகவுக்கு இரண்டு முறை வெற்றி கிடைத்துள்ளது.
17வது மக்களவை தேர்தலில்,  திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தமிழச்சி தங்கப்பாண்டியன், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தனனை 2,62,223 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment