தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
அந்தவகையில் தென் சென்னை தொகுதியில் இந்த முறை தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக), தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக), ஜெயவர்தன் (அதிமுக) என மக்களிடம் நன்கு அறிமுகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
குறிப்பாக தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.
திமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின், தி.நகர் முத்துரங்கன் சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய உதயநிதி, கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் தமிழச்சி அக்காவை 2, 63,000 வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்க வச்சு மிகப்பெரிய வெற்றிய கொடுத்தீங்க. அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மக்களாகிய நீங்கதான். ஆனா இந்த முறை அந்த வாக்கு வித்தியாசம் பத்தாது.
போனமுறை நம்ம எதிரிகள் எல்லாம் ஒரே அணியில வந்தாங்க. ஆனால் இன்று நம்ம எதிரிகள் எல்லாம் பிரிஞ்சு வந்துருக்காங்க.
தமிழிசை தூத்துக்குடியில தோற்று பாண்டிச்சேரி, தெலுங்கானாவுல ஆளுநரா இருந்து அங்க அந்த மக்கள் ஓடவிட்டு, இப்போ ஆட்டுக்குட்டி தானா வந்து சிக்கியிருக்கு. வாக்கு எண்ணிக்கையில 5 லட்சத்துக்கு கீழே குறைஞ்சா நான் இந்த பக்கம் வரவே மாட்டேன், என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் போட்டியிட்டு வென்ற தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அக்கா @ThamizhachiTh அவர்களுக்கு நம் வெற்றிச்சின்னமாம் உதயசூரியனுக்கு ஆதரவாக வேளச்சேரி காந்தி சாலையில் இன்று வாக்குச் சேகரித்தோம்.
— Udhay (@Udhaystalin) April 2, 2024
முதலமைச்சரின் காலைச்சிற்றுண்டித் திட்டம் போன்ற நம்… pic.twitter.com/V3dffokVxh
பின்னர் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, திமுகவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. எங்கு போனாலும் கழகத்தினர், கூட்டணிக் கட்சியினர் நாம் தான் ஜெயிப்போம் என்று வெற்றிச் சின்னத்தை காட்டுகின்றனர்.
பொதுமக்களும் திமுக அரசின் திட்டங்களை புரிந்து கொண்டுள்ளனர். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் எல்லாமே மக்களிடம் நன்கு சென்றடைந்திருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொடுத்துவிட்டோம். அதில் மட்டும் சின்னசின்ன குறைகள் இருப்பதாக சொல்கிறார்கள். நான் அந்த குறைகளை கண்டிப்பாக தீர்த்து வைப்பேன் என்று சொல்லி இருக்கிறேன். மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுப்பார்கள்.
தமிழிசை கடந்த தேர்தலில் இப்படித்தான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். அதே முடிவுதான் இந்த தேர்தலிலும் அவருக்கு. மீண்டும் அவர் வேறு ஏதாவது மாநிலத்தில் ஆளுநராக செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.