/tamil-ie/media/media_files/uploads/2018/08/d4.jpg)
Tamil Nadu news today : ஓபிஎஸ் உடன் பாண்டவர் அணியினர் சந்திப்பு.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆகஸ்ட் 13ம் தேதி நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் எனத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி சென்னையில் காலமானார். மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகத்தினர் திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஆகஸ்டு 13ம் தேதி திங்கள் கிழமை மாலை 5 மணி முதல் சென்னை அண்ணாசலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
Tamil film industry will have memorial gathering for Late #KalaignarKarunanidhi on August 13th Monday at 5 p.m. in #KamarajarArangam#Chennai. #TFPC#FEFSI#SIAA
கலைஞர் மு கருணாநிதிக்கு திரை உலகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு pic.twitter.com/g6Y6sy4hUh
— Ramesh Bala (@rameshlaus) August 11, 2018
இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.