இன்றைய வானிலை : மாலத்தீவு மற்றும் அந்தமான் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதாகவும், மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அறிவித்தார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச் சந்திரன்.
இன்றைய வானிலை : தென்தமிழகத்தில் தொடரும் மழை
நெல்லை மாவட்டம் மணிமுத்தாற்றில் 28.6 சென்டி மீட்டர் மழை பதிவானது. அதைப் போல பச்சையாற்றில் 12.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவில் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சிவகங்கை பகுதியிலும், மதுரையிலும் கனமழை நேற்று மழை பெய்தது. விருதுநகர் பகுதியில் நாளையும் மழை பெய்யுமானால், சதுரகிரி மலையில் இருக்கும் சுந்தரம் மகாலிங்கம் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க : மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை