அண்ணனூர் – ஆவடி வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், 50க்கும் மேற்பட்ட ரயில்களின் இயக்கம் தாமதமாகியுள்ளது.
அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் இருப்புப்பாதையை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக தடம் புரண்ட ரயில் 4 பெட்டிகளில் பயணிகள் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து காரணமாக, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய ரயில்களில் தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ரயில்களின் இயக்கம் தாமதமாகியுள்ளது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பாரத், சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“