/indian-express-tamil/media/media_files/2025/06/06/Isw73G17qijZsrPJeNad.jpg)
தீபாவளி பண்டிகையின்போது கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னை போன்ற நகரங்களில் இருந்து பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு முன்னதாகவே ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, தெற்கு ரயில்வே அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை - கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில்
டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எண். 06151) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செப்டம்பர் 22, 29 மற்றும் அக்டோபர் 6, 13, 20 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) இரவு 11:50 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1:20 மணிக்குக் கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கன்னியாகுமரி - டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (எண். 06152) செப்டம்பர் 23, 30 மற்றும் அக்டோபர் 7, 14, 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 3:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்குச் சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
திருநெல்வேலி - செங்கல்பட்டு வாராந்திர சிறப்பு ரயில்
திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண். 06154) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செப்டம்பர் 26, 28 மற்றும் அக்டோபர் 3, 5, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மதியம் 1:15 மணிக்குச் செங்கல்பட்டைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், செங்கல்பட்டு - திருநெல்வேலி இடையே வாரம் இருமுறை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண். 06153) செப்டம்பர் 26, 28 மற்றும் அக்டோபர் 3, 5, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) செங்கல்பட்டில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு திருநெல்வேலியைச் சென்றடையும்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப்டம்பர் 20) காலை 8:00 மணிக்குத் தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.