தீபாவளியை முன்னிட்டு மேலும் 2 சிறப்பு ரயில்கள்… தென்னக ரயில்வே அறிவிப்பு
தீபாவளியை முன்னிட்டு மேலும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் நாகர்கோவில்- பெங்களூரு, தாம்பரம்-கொச்சுவேலி இடையே இயக்கப்படுகின்றன.
நாகர்கோவில்-பெங்களூரு இடையேயான சிறப்பு ரயில்கள் அக்.25ஆம் தேதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு பெங்களூரு செல்லும்.
மறுமார்க்கத்தில் அக்.26ஆம் தேதி காலை 10.15க்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.
இந்த ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல் கொச்சுவேலி தாம்பரம் இடையே அக்.26ஆம் தேதி காலை 11.40க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு கொச்சுவேலி வந்து சேரும். இந்த ரயில் திருவனந்தபுரம், குளித்துறை, நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில் மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து அக்.26ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil