சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னையில் மின்சார ரயில் சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கூடுவாஞ்சரி – தாம்பரம் இடையே இயக்கப்பட்ட மின்சார ரயில், சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய போக்குவரத்து அம்சங்களில் ரயில் போக்குவரத்து இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடங்கி அலுவலக பணிக்காக செல்பர்கள் வரை பலரும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் இருக்கும் மின்சார ரயில் சேவையில் நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
ரயில் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம், அவ்வப்போது மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் 3 மின்சார ரயில்கள் நீடிப்பு செய்யப்பட்ட்ளளது, அதன்படி, இதுவரை கூடுவாஞ்சரி – தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயில் இனி சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் சேவை கிடைத்து வருகிறது.
அதேபோல் தாம்பரம் – கடற்கரை மின்சார ரயிலில், தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த ரயில் சேவை இனி இரவு, 8.55, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை ஸ்டேஷன் வரை ரயில்சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதியம் 12.10 மணிக்கு மூர்மார்க்கெட் – குமிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சூலூர்பேட்டை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் 3 புதிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, காலை 9.50 மணிக்கு ஆவடி முதல் சென்னை செண்ட்ரல் வரை ஒரு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. அடுத்து காலை 10.40 மணிக்கு சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. மாலை 3.50 மணிக்கு, திருவள்ளூரில் இருந்து சென்ரலுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று புதிதாக 3 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“