வரா இறுதியில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கடைக்கோடி பகுதியில் இருந்தும் சென்னையில் வந்து பலர் வேலை பார்த்து வருகின்றனர். இதில் பெரும்பாலானர்கள் ஐ.டியில் வேலை பார்ப்பதால் அவர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் விடுமுறை இருக்கும். வங்கி மற்றும் பள்ளிகளுக்கு 2-வது மற்றும் 4-வது வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. ஒரு பகுதியினருக்கு ஞாயிறு மட்டும் தான் விடுமுறை என்றாலும், சனிக்கிழமை விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு செல்வார்கள்.
இதன் காரணமாக வார இறுதியில், பேருந்து நிலையம், மற்றும் ரயில் நிலையங்கள் பயணிகளின் வரவால் நிரம்பி வழியும். இதில், சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்துவர்கள் தங்களது இரு சக்கர வாகனத்திலேயே தங்களது ஊருக்கு சென்றுவிடுகின்றனர். அதே சமயம் மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாப தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பேருந்து அல்லது ரயிலில் பயணித்து தங்களது ஊருக்கு செல்கின்றனர்.
வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பேருந்துகள் கிடைப்பது அரிதாக இருக்கும். அப்படியே கிடைத்தாலும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நின்றுகொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்படும். இதற்கு பயந்துகொண்டு ஆம்னி பேருங்களில் செல்லலாம் என்றாலும் அதில் கட்டணம் அதிகம் என்பதால் பயந்துவிடுகிறார்கள். அதே சமயம் ரயிலில் செல்லலாம் என்றாலும், அதிலும் கூட்ட நெரிசல் இருக்கிறது. ரயிலில் செல்ல வேண்டும் என்றால் ஒரு மாத்திற்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்யலாம் என்றாலும், தொங்கிக்கொண்டு ஆபத்தான் பயணத்தையே மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்ட தெற்கு ரயில்வே இன்று இரவு (ஆகஸ்ட் 9)11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து 11 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம் தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக காலை 6.40 மணிக்கு திருச்சி செல்லும்.
அதேபோல் ஆகஸ்ட் 11-ந் தேதி இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம் வழியாக காலை ஆகஸ்ட் 12-ந் தேதி காலை 5.50 மணிக்கு மீண்டும் தாம்பரம் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.