/indian-express-tamil/media/media_files/d7MSfmJoOKYrQURB62AL.jpg)
தீபாவளிக்கு முந்தைய தினம் தாம்பரத்திலிருந்து காரைக்குடி சிவகங்கை மானாமதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வண்டி எண் 06189 தாம்பரம் - தூத்துக்குடி அதிவிரைவு சிறப்பு ரயில் தாம்பரத்தில் மதியம் 12:20 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் 30.10.2024 (தீபாவளிக்கு முந்தைய நாள்), மற்றும் 05.11.2024 ஆகிய இரு தினங்களில் இயங்கும்.
வண்டி எண் 06188 தூத்துக்குடி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் நோக்கி செல்லும் இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர்,திருவரங்கம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது, அதிகம் பயன்படுத்தி பயன்பெறுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.