பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 25) சென்னையில் பல இடங்களில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில், விடுமுறை தினத்தில் வெளியில் செல்ல திட்டமிட்டிருந்த சென்னை வாசிகள் பலருக்கும் இந்த அறிவிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாரம் முழுவதும் பணிகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் பலரும், வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்வது வழக்கம். இதற்காக அவர்கள், பயணம் செய்ய முதல் தேர்வாக இருப்பது மின்சார ரயில்கள். இதன் காரணமாக வார நாட்களை விடவும், வார இறுதி நாட்களில், மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
130 ஆண்டுகள் பழைமயான உலகின் மிகப்பெரிய ரயில்போக்குவரத்தை வைத்துள்ள இந்தியாவில், அவ்வப்போது ரயில்போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். 12 லட்சத்திற்கு அதிகமாக ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தெற்கு ரயில்வேயில் முக்கிய நகரமாக இருக்கும் சென்னையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, மின்சார ரயில் பெரிய உதவியாக இருந்து வருகிறது.
இதனிடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் (ஆகஸ்ட் 24) மற்றும் நாளை (ஆகஸ்ட் 25) சென்னையில், புறநகர் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு 9.10 மற்றும் 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து 10.40, 11.20, மற்றும் 11.40 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு 7.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், திருவள்ளூரில் இருந்து 9.35 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.20 மணிக்கு குமிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்கு செல்லும் மின்சார ரயில், இரவு 9.55 மணிக்கு குமிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்ரைக்கு செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. நாளை காலை சென்னை கடற்ரையில் இருந்து 4.15 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் 4.05 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி புறப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர் – சென்னை கடற்கரை மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டுவில் இருந்து 8.45, 9.10, 10.10, மற்றும் 11 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி புறப்படும் மின்சார ரயில், எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே பகுதியளவில் செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் பகுதியளவு இயக்கப்படும்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு நாளை அதிகாலை 3.55 மணிக்கு செங்கல்பட்டு புறப்படும் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரை எழும்பூர் பகுதிகளில் செயல்படும். மேற்கண்ட ரயில்கள் எழும்பூர் ரயல் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும், சென்னை கடற்ரையில் இருந்து இன்றிரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்படும் ரயில்கள், கடற்கரை எழும்பூர் இடையே பகுதியளவில் இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“