தென் மாவட்டங்களில் மழை கனமழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து புறப்படும் ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் உள்ள ஏரி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில்,கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை தண்ணீரில் மூழ்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தங்கள் உடைமைகளை இழந்து தத்தளித்து வந்தனர்.
தற்போது சென்னையில் நிலைமை சீரடைந்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தென் தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும் என்று அறிவித்துள்ளதால் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
மேலும் தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல்லையில் இருந்து புறப்படும் பல ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நாகர்கோவில் - கோயம்புத்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் எண். 22667 நாகர்கோவில் - மதுரை சேவை ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து புறப்படும்.
கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜூமி கன்னியாகுமரி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து புறப்படும்
நாகர்கோவில் தாம்பரம் அதிவிரைவு விரைவுப் ரயில் எண். 22658 நாகர்கோவில் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து புறப்படும்.
நாகர்கோல் - SMVT பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஜூமி ரயில் எண். 17236 நாகர்கோவில் மற்றும் மதுரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து புறப்படும்.
திருநெல்வேலி - தாதர் விரைவுப் ரயில் எண். 11022 திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து சேவையைத் தொடங்கும்
தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ் ஜூமி ரயில் எண். 16235 தூத்துக்குடி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து சேவையைத் தொடங்கும்
திருச்செந்தூர் மைசூரு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் எண். 20606 ஜர்மே, திருச்செந்தூர் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து ரயில் சேவை தொடங்கும்
திருநெல்வேலி சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜூமி ரயில் எண். 12632 திருநெல்வேலி மற்றும் மதுரைக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து புறப்படும்.
தூத்துக்குடி சென்னை எழும்பூர் விரைவுப் ரயில் எண். 12694 தூத்துக்குடி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் இன்று (டிசம்பர் 18) மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.