பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டலம் சார்பில் தென்காசியில் இருந்து கோவா மூகாம்பிகை சிறப்பு தரிசனம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மேலாளர் சுப்பிரமணி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஆர்.சி.டி.சி பொது மேலாளர் சுப்பிரமணி, இந்தியன் ரயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி ஆனது சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யோக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில் மூன்று குளிர்சாதன பெட்டிகள், எட்டு ஸ்லீப்பர் கோச்கள் ஒரு பேன்ட்ரி கார் இரண்டு பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் தென் மண்டல சார்பில் தென்காசியில் இருந்து கோவா மூகாம்பிகை சிறப்பு தரிசனம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று சுப்ரமணி கூறியுள்ளார்.
சுற்றுலா ரயில் தென்காசியில் இருந்து தொடங்கி ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக ஒரு குழு கோவாவிற்கும், மற்றொரு குழு உடுப்பி கொல்லூர் மூகாம்பிகை மிருதேஷ்வர் சிருங்கேரி மற்றும் ஹோராநாடு வரையும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுப்ரமணி கூறியுள்ளார்.
மேலும் கோவா ஸ்பெஷல் ஆறு நாட்களுக்கும் மூகாம்பிகை சிறப்பு தரிசனம் என குறிப்பிட்டுள்ள சுப்ரமணி, சுற்றுப்பயணம் 7.12.2023 அன்று தொடங்க உள்ளதாகவும், இதற்கான கட்டணமாக ரூ.11,750 மற்றும் 19,950 ரூபாய் பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“