Advertisment

பண்டிகை காலம்; சென்னையில் இருந்து கோவை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவை, திருச்சி, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள்; திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Salem Mayilai Train

பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சி, கோவை, திருப்பதி, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

இதன்படி, கோவை - சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06171) கோவையில் இருந்து இன்று (அக்டோபர் 6) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நாளை (அக்டோபர் 7) காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வண்டி எண்: 06172) சென்னை எழும்பூரில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு புறப்டடு அதேநாள் மாலை 6 மணிக்கு போத்தனூரை சென்றடையும். 

சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் (வண்டி எண்: 06178) வரும் 9 ஆம் தேதி இயக்கப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வண்டி எண்: 06179) 10 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். 

சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையேயான சிறப்பு ரயில் (வண்டி எண்: 06186) வருகின்ற 8 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (வண்டி எண்: 06187) தூத்துக்குடியில் இருந்து 9 ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மேலும், திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு ரயில் வரும் 11 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வார நாட்களில் திங்கள், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்: 06190) திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வண்டி எண்: 06191) தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும். தற்போது இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா இடையே சிறப்பு மெமூ மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும். ரேணிகுண்டாவில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Southern Railway Special Trains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment