சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 2 புதிய EMU ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கும்மிடிப்பூண்டி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் EMU உள்ளூர் ரயில் காலை 9.10 மணிக்கு கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் பலமுறை விடுத்த வேண்டுகோளின் பேரில் தெற்கு ரயில்வே சென்னையில் இருந்து கும்மிடிபூண்டிக்கு 2 புதிய EMU ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கும்மிடிபூண்டி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் EMU உள்ளூர் ரயில் காலை 9.10 மணிக்கு கும்மிடிபூண்டியிலிருந்து புறப்படும்.
அதே போல, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கும்மிடிபூண்டி EMU உள்ளூர் ரயில் இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் 3 முதல் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து நான்கு புதிய EMU சேவைகளை அறிமுகப்படுத்துவதாக சென்னை ரயில்வே பிரிவு அறிவித்துள்ளது.