Advertisment

4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்; தென்னக ரயில்வே வாரியம் ஒப்புதல்

திருச்செந்தூர் - சென்னை ரயில் குத்தாலத்தில் நின்றுச் செல்லும்: 4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்: தென்னக ரயில்வே வாரியம் ஒப்புதல்

author-image
WebDesk
New Update
railway Train

தென்னக ரயில்வே

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில் உட்பட 4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களை வழங்கி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே தெரிவித்துள்ளதாவது;

Advertisment

சென்னை எழும்பூர் - கொல்லத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 7.52 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். மறு மார்க்கமாக, கொல்லம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 11.03 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த நிறுத்தம் அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது.

சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயில் குத்தாலம் ரயில் நிலையத்தில் இரவு 9.02 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். மறு மார்க்கமாக, திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் ரயில் குத்தாலத்தில் அதிகாலை 4.33 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த நிறுத்தம் அறிவிப்பும் அமலுக்கு வந்துள்ளது.

மேலும், சென்னை எழும்பூர் - திருச்செந்தூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில், குத்தாலம் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து நேரம் மாற்றப்பட்டு, இரவு 9.21 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இதுதவிர, மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில், விழுப்புரம் - திண்டுக்கல் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இரு மார்க்கமாகவும் வடமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேற்கண்டவாறு தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Southern Railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment